Cricket

வீடியோ ஹர்மன்ப்ரீத் – தீப்தி ஷர்மா செய்த ஏற்க முடியாத ரன்அவுட்… மைதானத்திலேயே கண் கலங்கிய இங்கிலாந்து வீராங்கனை.. ஒரு வெற்றிக்காக இன்னொருவரை காயப்படுத்திய இந்திய அணியினர்

இந்திய மகளிர் அணியினர் அணியின் வெற்றிக்காக தீப்தி ஷர்மா எடுத்த இங்கிலாந்தின் கடைசி விக்கெட் அரங்கத்தை அதிரவைக்கும்படியாக இருந்தது. 39 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி ஒரு விக்கெட்டை வைத்துக்கொண்டு கடுமையான சூழலில் விளையாடிக்கொண்டிருந்த இங்கிலாந்து பெண்கள் அணிக்கு இந்த விக்கெட் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது. ஹர்மன்ப்ரீத் ஐடியா கொடுக்க, தீப்தி ஷர்மா அந்த கடைசி விக்கெட்டை கிரிக்கெட்டின் புதிய விதிகளை பயன்படுத்தி அசால்ட்டாக கைப்பற்றினார்.

தீப்தி ஷர்மா இந்த ஓவரின் நான்காவது பந்தை வீசா ஓடிவந்தபோது, அவர் பந்துவீசுவதற்குள் ஃப்ரேயா டேவிஸ் கிரீஸை தாண்டி பல் அடிகள் நகர்ந்து சென்றுவிட்டார். இதை பயன்படுத்திக்கொண்ட தீப்தி, பந்தை வீசாமல் ஸ்டம்ப்பில் அடித்து டேவிஸை அவுட் செய்தார். நடுவர் ரீவியூ செய்தபிறகு புதிய கிரிக்கெட் விதிகளின்படி அவுட் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியா கடைசி விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் வெற்றிபெற்றது. இதனால், ஸ்ட்ரீக்கிங்கில் இருந்த சார்லி டீன் கண்கலங்கினார். டேவிஸ் அவருக்கு ஆறுதல் தெரிவித்து அரவணைத்தார்.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி சனிக்கிழமை லண்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மற்றும் பின்வரிசையில் தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ஸ்மிரிதி மந்தனா 50 ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 68 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.


மற்ற அனைவருமே சொற்ப ஓட்டங்களையே எடுக்க இந்திய அணி வெறும் 169 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. 170 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் பவுலிங்கில் சரணடைந்தது. அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, 43.3 ஓவரில் 153 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button