2 ரன், 3 விக்கெட்.. ப்பாஹ் வேற லெவல் பவுலிங். இங்கிலாந்து கையில் இருந்த வெற்றியை தட்டித் தூக்கிய பாக்.. மாஸ் கேப்டன்ஷி செய்த பாபர் அஸாம்

இங்கிலாந்து அணியுடனான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் முடிந்த 3 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. இந்நிலையில் 4வது டி20 ஆட்டம் கராச்சி நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 167 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.

அந்த அணி வீரர் பென் டுக்கெட் 33 ரன்னும், ஹாரி புரூக் 34 ரன்னும் அடித்தனர். கேப்டன் மொயின் அலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவ்சன் 34 ரன் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிந்தனர். 19.2 ஒவர் முடிவில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் மற்றும் ஹரிஸ் ரூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹஸ் நைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 3 விக்கெட்டுகள் வைசமிருந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக வெறும் 5 ரன்கள் மாத்திரம் தேவையான நிலையில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது. இந்த தொடரில் தற்போது 2-2 என்ற வெற்றிக் கணக்கில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் சமநிலையில் உள்ளன.