டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்படும் ரோஹிட் சர்மா.. பி.சி.சி.ஐ மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவு

மூன்றாவது போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோஹித் ஷர்மா, கோச் ராகுல் டிராவிட்டிம் இணைய வழியில் பேசிய பிசிசிஐ நிர்வாகிகள், ”இரண்டு இந்திய அணிகளை உருவாக்க வேண்டும் என நீங்கள் கேட்டுக்கொண்டபோது அதற்கு சம்மதம் தெரிவித்தோம். அதற்கு எந்த பலனும் கிடைத்ததுபோல் தெரியவில்லை. மெய்ண் அணியை ரெகுலராக விளையாட விட்டிருந்தால், பௌலர்களுக்கு நல்ல அனுபவமாக இருந்திருக்கும்.

குறைந்த போட்டிகளில் விளையாடியதால்தான் பும்ரா கூட பார்ம் அவுட் ஆகியிருக்கிறார் என நினைக்கிறோம். இந்த அணியை வைத்துக்கொண்டு டி20 உலகக் கோப்பைக்கு சென்றால் காலிதான். விரைவில் உறுதியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பைனலுக்கு முன்னேறாமல் வெளியேறும் பட்சத்தில் அடுத்து டி20 அணிக் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மாவை நீக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.