இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. 3 ஆண்டுகளின் பின்னர் பிரபல நாட்டுக்கு விஜயம் செய்யும் இலங்கை கிரிக்கெட் அணி. போட்டி அட்டவணை உள்ளே

இலங்கை கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுவதற்காக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. முதல் தொடரான இரு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 2023 மார்ச் 9ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகிறது. பின்னர் ஐ.சி.சி உலகக்கிண்ண சுப்பர் லீக் தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நடைபெறுகிறது.

ஒருநாள் தொடரினை அடுத்து இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் ஆடுகின்றன. இறுதியாக 2019ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுத்தொடர் அட்டவணை
மார்ச் 09-13 – முதல் டெஸ்ட் போட்டி – கிறைஸ்ட்சேர்ச்
மார்ச் 17-21 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – வெலிங்டன்
மார்ச் 25 – முதலாவது ஒருநாள் போட்டி – ஒக்லேன்ட்
மார்ச் 28 – இரண்டாவது ஒருநாள் போட்டி – கிறைஸ்ட்சேர்ச்
மார்ச் 31 – மூன்றாவது ஒருநாள் போட்டி – ஹமில்டன்
ஏப்ரல் 02 – முதலாவது இருபதுக்கு 20 போட்டி – ஒக்லேன்ட்
ஏப்ரல் 05 – இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி – டனேடின்
ஏப்ரல் 08 – மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி – குயின்ஸ்டவ்ன்