15 ஆண்டுகளின் பின்னர் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் டெஸ்ட் தொடர் – வெளியான அறிவிப்பு

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இருதரப்பு டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஆர்வமாக உள்ளது. இந்திய – பாகிஸ்தான் இடையே கடந்த 2007ஆம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. மும்பை, இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007ஆம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை.

தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 7 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் மார்ட்டின் டார்லோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வைத்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து பேசியதாக ஆங்கில செய்தி நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *