கோலிக்கு அப்பன் வேற எங்கயும் இல்ல, பக்கத்துல தான் இருக்கான்.. எங்க இருந்துடா இந்த தங்கத்த கொண்டுவந்திங்க… ஒரே போட்டியில் தவான், றிஸ்வான் ஆகியோரின் மல்டி லெவல் சாதனையை முறியடித்த இளம் வீரர் சூர்யகுமார்

3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டி.20 போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (0), விராட் கோலி (3) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், கே.எல் ராகுல் (51) மற்றும் சூர்யகுமார் யாதவ் (50) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் 16.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதமும் அடித்த சூர்யகுமார் யாதவ், இதன் மூலம் சில சாதனைகளுக்கும் சொந்தக்காரராகியுள்ளார். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் நடப்பு ஆண்டில் (2022) நடைபெற்ற டி.20 போட்டிகளில் 732 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இதன் மூலம், ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். ஷிகர் தவான் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற டி.20 போட்டிகளில் 689 ரன்கள் குவித்திருந்ததே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, இதனை தற்போது சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா உள்பட இந்திய அணியின் முக்கிய வீரர்கள் கூட ஒரே ஆண்டில் 700க்கு மேற்பட்ட ரன்கள் அடித்தது இல்லை. அதே போல் இந்த போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ், இதன் மூலம் ஒரே ஆண்டில் (டி.20 போட்டிகளில் மட்டும்), அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். முகமது ரிஸ்வான் கடந்த 2021ம் ஆண்டு 42 சிக்ஸர்கள் அடித்ததே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, இதனை தற்போது சூர்யகுமார் யாதவ் அசால்டாக முறியடித்துள்ளார்.
ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 3 வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் – 45 சிக்ஸர்கள் – 2022ம் ஆண்டு
முகமது ரிஸ்வான் – 42 சிக்ஸர்கள் – 2021ம் ஆண்டு
மார்டின் கப்தில் – 41 சிக்ஸர்கள் – 2021ம் ஆண்டு
டி.20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியல்;
சூர்யகுமார் யாதவ் – 732 ரன்கள் – 2022ம் ஆண்டு
ஷிகர் தவான் – 689 ரன்கள் – 2018ம் ஆண்டு
விராட் கோலி – 641 ரன்கள் – 2016ம் ஆண்டு
ரோஹித் சர்மா – 590 ரன்கள் – 2018ம் ஆண்டு
ரோஹித் சர்மா – 497 ரன்கள் – 2016ம் ஆண்டு