Cricket

என்னடா இது உலகை ஜெயிக்கிற டீமுக்கு வந்த சோதன.. டி20 போட்டிகளில் 6 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுடன் படைத்த மிக மோசமான சாதனையை மீண்டும் படைத்த இந்திய அணி

3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் தொடரான டி20 தொடரின் முதல் போட்டி நேற்று திருவாணந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (0), விராட் கோலி (3) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், கே.எல் ராகுல் (51) மற்றும் சூர்யகுமார் யாதவ் (50) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் 16.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 107 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய இந்திய அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர்பிளேயில் அவதாவது முதல் 6 ஓவர்களில் ஆகக்குறைந்த ஓட்டங்கள் என்ற மோசமான சாதனையை நேற்று பதிவு செய்தது. 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் இழப்பு 21 ஓட்டங்களை பெற்றதே இதற்கு முன்னர் குறைவான ஓட்டங்களாக காணப்பட்டது.

Here are India’s lowest ever scores in a powerplay in T20Is:
17/1 vs South Africa , 2022
21/3 vs Pakistan, 2016
22/3 vs England, 2021

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button