டி20 கிரிக்கெட்டில் எப்படி சேஸ் பண்ணனும் என்பதை இலங்கை அணியிடம் கற்றுக் கொள்ளுங்கள் – மீண்டும் பரிதாபமாக தோற்ற இங்கிலாந்துக்கு அட்வைஸ் கொடுக்கும் இலங்கை ரசிகர்கள்
7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. 4 போட்டிகள் நிறைவில் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது டி-20 போட்டி லாகூரில் நேற்று இரவு நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 63 (46) ரன்கள் எடுத்தார்.
இதனைத்தொடர்ந்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியில் டேவிட் மலான் தனது நிதான ஆட்டத்தால் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மொயின் அலி தனது சிறப்பான ஆட்டம் மூலம் 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் மொயின் அலி 51 (37) ரன்களும், டேவிட் வில்லி ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹரிஸ் ரூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதன்படி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது. சிறிய ஸ்கோரை கூட சேஸ் பண்ண முடியாமல் சிக்கி தவிக்கும் இங்கிலாந்து அணியை இலங்கை ரசிகர்கள் கலாய்த்து வகின்றனர்.