Video | டாஸ் ஜெயித்து முதலில் பவுலங் செய்ய வேண்டும் என்பதற்காக யாருக்கும் தெரியாத இடத்தில் வீசி, இன்னுமொரு இந்தியரை கொண்டு ஊழல் செய்யும் கேப்டன் ரோஹிட்

இந்த போட்டி தொடங்க முன்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹிட் சர்மா டாஸ் போட்ட விதம் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோ கீழே உள்ளது.
3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் தொடரான டி20 தொடரின் முதல் போட்டி நேற்று திருவாணந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (0), விராட் கோலி (3) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், கே.எல் ராகுல் (51) மற்றும் சூர்யகுமார் யாதவ் (50) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் 16.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.