Cricket

நான் மும்பை அணியில் இருந்தபோது அவருக்கு 18-19 வயதுதான் இருக்கும். அவரது கெரியரில் திருப்பு முனை ஏற்பட்டது மும்பை அணியில் கிடையாது – சூர்யகுமாரின் வளர்ச்சி தொடர்பில் ஜாம்பவான் பாண்டிங்

32 வயதான சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 1266 ரன்கள் எடுத்துள்ளார் அவர். இதில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 926 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற நிலையில் உள்ளார். மேலும் ஐ.சி.சி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில உள்ளார். இந்நிலையில், அவரது கிரிக்கெட் கரியரில் கேகேஆர் அணியில் விளையாடியபோது தான் திருப்புமுனை தொடங்கியதாக தெரிவித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.

‘நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது அவருக்கு 18-19 வயதுதான் இருக்கும். மிகவும் இளம் வீரர். அவர் எங்கள் அணியில் இருந்தபோதும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் அந்த அணியில் இருந்து விலகிய பிறகு அவரை கொல்கத்தா அணி வாங்கி இருந்தது. அங்குதான் அவருக்கு திருப்புமுனை கிடைத்தது. மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். பின்னர் மீண்டும் மும்பை அணி அவரை வாங்கியது.

இப்போது அந்த அணியின் மேட்ச் வின்னராக அவர் ஜொலித்து வருகிறார். அவரை மிக இளம் வயதில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு மட்டுமே தெரியும் அவரது திறன் என்னவென்று. அவர் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் தேடலை செழிக்க செய்தார்’ என பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button