சச்சின் சாதனையை முடியாது என்றோம், கோலி பிறந்தான்.. கோலி சாதனையை முடியாது என்றோம் பாபர் பிறந்தான்… கோலியின் இன்னுமொரு சாதனையை தட்டித்தூக்கிய பாபர்
இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற 6அவது டி20 சர்வதேச போட்டியில் விராட் கோலியின் சாதனையை பாக். அணியின் தலைவர் பாபர் அசாம் முறியடித்துள்ளார். பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 5 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகித்த நிலையில், 6வது டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, கேப்டன் பாபர் அசாம் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். கோலி மற்றும் அசாம் இருவரும் இந்த சாதனையை தங்களின் 81வது டி20 இன்னிங்சில் படைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மார்ட்டின் கப்டில் (101 இன்னிங்ஸ்) ரோஹித் சர்மா (108 இன்னிங்ஸ்) உள்ளனர்.