Cricket

பாக்கவே பரிதாபம்.. இனிமே கிரிக்கெட் ஆட வருவியா.? பாக். அணியினர் கிரிக்கெட்டை மறக்கும் அளவுக்கு பொழ பொழவென பொழந்து கட்டிய வெள்ளைக்காரன்.

பாகிஸ்தான் அணியுடனான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 6வது போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 3-3 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது. 6வது டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. போட்டியில் முததில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பாபர் அசாம்.

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டிய ஹேல்ஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் சால்ட் உடன் மலான் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் மலான் நிலைத்து நின்று விளையாட மறுபுறம் சால்ட் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 9.3 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்திருந்த போது மலான் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதை தொடர்ந்து பென் டக்கெட்- பில் சால்ட் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. பில் சால்ட் 41 பந்துகளில் 87 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3-3 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button