இலங்கை மக்கள் எந்தளவுக்கு கிரிக்கெட்டை நேசிக்கிறார்கள் புரிகிறது.. இலங்கை அணியின் வெற்றியை யானை வெடி கொளுத்தி கொண்டாடிய அதிகாரிகள் – விசாரணைகள் ஆரம்பம்

ஐக்கிய அரபு இராச்சியில் நிறைவடைந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற 12ஆம் திகதி இரவு ரித்திகல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ஐநூறுக்கும் மேற்பட்ட யானை வெடிகளை வெடிக்கவைத்து வெற்றியை கொண்டாடியதாக தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்த வனஜீவராசிகள் காரியாலயத்தின் உத்தியோகத்தர்கள் அன்று இரவை மது அருந்திவிட்டு, யானை வெடி வெடித்து கொண்டாடியமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்தார்.

ரித்திகல வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகள் காட்டு யானைகளை விரட்டுவதற்காக பொதுமக்களுக்கு யானை வெடிகளை விநியோகித்தமைக்கான ஆவணங்களைத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன அவர் மேலும் தெரிவித்தார். இருபதுக்கு 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற அன்று இரவு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளுக்கு மதுபானம் வழங்கி மகிழ்வித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.