‘அந்த சமயத்தில் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்’ – ரோஹிட்டிடம் ஓபனாக சொன்ன ஷமி

இந்திய அணியின் மிக முக்கிய முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான மொஹமட் ஷமி, மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள எண்ணியதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா உடனான இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் மொஹமட் ஷமி இதனை பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர், ‘அந்த நேரத்தில் எனது குடும்பம் எனக்கு ஆதரவு கொடுக்காமல் போயிருந்தால் எனது கிரிக்கெட் வாழ்க்கை காணாமல் போயிருக்கும். மிகுந்த மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அந்த சமயத்தில் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.

கிரிக்கெட் குறித்து அப்போது நான் எந்த எண்ணமும் கொண்டிருக்கவில்லை. நாங்கள் 24-வது மாடியில் வசித்து வந்தோம். நான் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என குடும்பத்தினர் அச்சம் கொண்டிருந்தனர். எனது நண்பர்கள் 2-3 பேர் எப்போதும் என்னுடன் இருப்பார்கள். அதிலிருந்து வெளிவர கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு வீட்டில் சொல்லி இருந்தார்கள். அவர்கள் சொன்னபடி டேராடூனில் அமைந்துள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கினேன்’ என தெரிவித்துள்ளார். மேலும் விபத்து காரணமாக ஐ.பி.எல் தொடரை மிஸ் செய்தது குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.