துடுப்பாட்டத்தில் ஜாம்பவான்களாக இருந்தும் ஐ.சி.சி கிண்ணத்தை வெல்ல முடியாமல் போன் ராசியில்லாத 6 கேப்டன்கள்
ஒரு அணியின் தலைவர் சிறப்பாக விளையாடும் வீரராக இருந்தாலும் அவர் ஒரு அணியை சிறப்பாக வழிநடத்த தெரிந்திருக்க வேண்டும். அணிகள் திறமையான அணிகளாக இருக்கலாம் ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்கு என்று ஒரு நேரம் வர வேண்டும். கிரிக்கெட் உலகில் தலைசிறந்து விளங்கிய கேப்டன்களில் ஏராளமானோர் ராசியில்லாத கேப்டன்களாகவே திகழ்கின்றனர். அவர்களினால் ஐ.சி.சி கிண்ணத்தை வென்றிருக்க முடியாது. அவ்வாறு ஐ.சி.சி கிண்ணத்தை வெல்ல முடியாத கேப்டன்கள் தொடர்பில் அவதானம் செலுத்தலாம்.
விராட் கோலி
இந்திய அணிக்கு பல இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியை தேடிக்கொடுத்த வீரராக விராட் கோலி காணப்படுகிறார். ஆனால் அவரால் இந்திய அணிக்கும் இன்னும் ஒரு ஐ.சி.சி கிண்ணத்தை வெல்ல முடியவில்லை. இதன் காரணம் பி.சி.சி.ஐ அவரை ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கியுள்ளது. அவர் ஒரு ராசியில்லாத கேப்டனாகவே திகழ்ந்து வருகிறார்.
முகமது அசாருதீன்:
இந்திய அணிக்காக நீண்டகாலம் சவுரவ் கங்குலிக்கு முன் கேப்டனாக செயல்பட்டார். அசாருதீன் 147 ஒருநாள் போட்டிகளுக்கும், 47 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகாலம் இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்ட இவரால், ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை
மஹேல ஜெயவர்தன:
இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம் மஹேல ஜெயவர்தனா. தலைசிறந்த வீரர்கள் இலங்கை அணியில் இருந்தும்கூட இவர் தலைமையில் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை. இவர் வழிநடத்திய 2006 சாம்பியன்ஸ் டிராபி, 2007- 20 ஓவர் உலக கோப்பை, 2007- 50 ஓவர் உலகக் கோப்பை என மூன்றிலும் இலங்கை அணி பங்கேற்று தோல்வியை தழுவியது.
க்ரம் ஸ்மித்:
மிகச்சிறு வயதில் தென்னாபிரிக்க அணிக்கு கேப்டனாக தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தினார். இவரது தலைமையில் 92 ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக ஏழு முறை ஐசிசியினால் நடத்தப்பட்ட சர்வதேச தொடர்களில் ஸ்மித் தலைமையில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி, ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை.
ஏபி டிவில்லியர்ஸ்:
360 டிகிரி விளையாட்டுகாரர் என்று செல்லமாக அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் தலைமையில் கூட தென்னாபிரிக்க அணி ஐசிசி கோப்பையை வென்றதில்லை. இவர் மொத்தமாக 103 ஒருநாள் போட்டிகளிலும், 18 டி20 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.
வி வி ரிச்சர்ட்ஸ்:
கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் ஒரு காலத்தில் தங்களுடைய ஆளுமையை நிரூபித்து வந்தது. எப்பொழுதுமே மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வீரர்கள் பலர் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர்தான் வி வி ரிச்சர்ட்ஸ். இவரை கண்டு அஞ்சாத பந்துவீச்சாளர்கலே இல்லை என்று கூறலாம். இவர் தலைமையில் கூட அந்த அணியால் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.