முதல் மனைவி செய்த துரோகத்தால் தற்கொ லை செய்ய முயன்ற தினேஷ் கார்த்திக்.. ஆனால் தீபிகாவின் காதலால் தான் இன்று 2வது இன்னிங்ஸில் ஆடுகிறார் – வலிகள் நிறைந்த கார்த்திக்கின் கதை இது

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் கெரியரும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, இரண்டுமே கடும் போராட்டங்களும் வலி வேதனைகளும் நிறைந்தது. 2022 ஐ.பி.எல் தொடரில் ஆர்சிபி அணியின் ஃபினிஷராக பட்டைய கிளப்பிய தினேஷ் கார்த்திக்கின் போராட்டங்களை பார்ப்போம். இந்திய கிரிக்கெட் அணியில் 2004ம் ஆண்டு இளம் வயதிலேயே அறிமுகமான தினேஷ் கார்த்திக், தோனியிடம் தனது இடத்தை இழந்தார். தோனியின் அதிரடியான பேட்டிங், அருமையான விக்கெட் கீப்பிங் ஆகியவற்றின் விளைவாக அவர் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க, தினேஷ் கார்த்திக் அவரிடம் தனக்கான நிரந்தர இடத்தை இழந்தார். தோனிக்கு அடுத்து 2வது விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாகவே தினேஷ் கார்த்திக் பார்க்கப்பட்டார்.

தினேஷ் கார்த்திக்கின் இந்த வளர்ச்சிக்கு பின் கடுமையான போராட்டங்கள் நிறைந்திருக்கிறது. கிரிக்கெட் கெரியரில் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க போராடிவந்த தினேஷ் கார்த்திக்கிற்கு, ஆதரவாக இருந்து அவருக்கு ஊக்குமும் உத்வேகமும் அளித்து வளர்த்துவிட வேண்டிய மனைவியே அவருக்கு துரோகமும் செய்தார். தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதா, அவரது சக வீரரான முரளி விஜயுடன் தொடர்பில் இருந்தார். இது தமிழ்நாடு ரஞ்சி அணியில் ஆடிய அனைவருக்குமே தெரியும்.

திடீரென ஒரு நாள், தான் முரளி விஜயால் கர்ப்படமைந்திருப்பதாகவும், அதனால் விவாகரத்து செய்வதாகவும் தினேஷ் கார்த்திக்கிடம் கூட, மனிதன் மனம் உடைந்து போய்விட்டார். தன் மனைவி செய்த துரோகத்தை சகித்துக்கொள்ளவும், தாங்கிக்கொள்ளவும் முடியாமல் தற்கொலை செய்யக்கூட முயற்சித்துள்ளார் தினேஷ் கார்த்திக். தன் மனைவி செய்த துரோகம் கொடுத்த வலியால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாமல், இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்ததுடன், ரஞ்சிக்கான தமிழ்நாடு அணியின் கேப்டன்சியையும் முரளி விஜயிடம் இழந்தார்.

துவண்டு போயிருந்த தினேஷ் கார்த்திக்கை அவரது பயிற்சியாளர், தீபிகா பல்லிக்கல் (தினேஷ் கார்த்திக்கின் இப்போதைய மனைவி) பயிற்சி செய்துகொண்டிருந்த ஜிம்மில் சேர்த்துவிட, அங்கு தினேஷ் கார்த்திக்கின் நிலையை கண்டு வருத்தப்பட்ட தீபிகா, அவருக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தார். அவர்கள் இருவருக்கும் காதல் மலர, அவரை 2015ம் ஆண்டு மணந்தார். தீபிகாவை மணந்தபின்னர் தினேஷ் கார்த்திக் வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்ந்ததுடன், தோல்விகளால் துவளாமல் தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தார்.

அவ்வப்போது இந்தியாவிற்காக ஆட கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டார். ஆனால் தோனிக்கு பின் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்தை பிடித்துவிட்டதால், இப்போதும் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். ஆனாலும் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி அசத்திவருகிறார். 2022 ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணியின் ஃபினிஷராக ஜொலித்து வருகிறார். ஆனால் தினேஷ் கார்த்திக்கிற்கு துரோகம் செய்த முரளி விஜய், தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதாவை திருமணம் செய்தபின்னர் வீழ்ச்சியை சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *