நான் இந்திய அணியின் கோச்சாக இருந்தால், ‘இதோ பார் கோலி, இதுதான் உன் நிலை, இது மாறப்போவதில்லை. உன்னை நீ நம்பு, உலகின் சிறந்த பேட்டராக எது நம்மை ஆக்கியது என்பதை நினைத்துப் பார், ரன்கள் கொட்டும்’ என கூறுவேன் – ரிக்கி பாண்டிங் டாக்

விராட் கோலி தற்போது பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில் பல விமர்சனங்களுக்கும் முகங்கொடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக பலரும், எதிராக பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொண்டிங் விராட் கோஹியின் பார்ம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். ‘கோலியை ஓப்பனிங் அனுப்புவது 4ம் நிலையில் அனுப்புவது என்று மாற்றிக் கொண்டே இருந்தால் அது அவரது தன்னம்பிக்கையை இழக்கவே செய்யும்.

எனவே நானாக இருந்தால் அவரைக் கூப்பிட்டு, ‘இதோ பார் கோலி, 3ம் நிலையில் இறங்கு. இதுதான் உன் நிலை, இது மாறப்போவதில்லை. உன்னை நீ நம்பு, கடின உழைப்பைப் போடு, உலகின் சிறந்த பேட்டராக எது நம்மை ஆக்கியது என்பதை நினைத்துப் பார், அந்தச் சிந்தனைகளுக்குள் செல், ரன்கள் கொட்டும்’ என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
‘ஆனால் அவருக்கு சில சவால்கள் இருக்கவே செய்யும் எல்லா கிரேட் பேட்டர்களுக்கும் இத்தகைய தருணங்கள் உண்டு. கோலி நிச்சயம் மீண்டெழுவார், காலம் தான் பதில் சொல்லவேண்டும். மேலும் டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியை ஆடவைக்காமல் வேறு யாரையாவது ஆட வைத்து அவர் நன்றாக ஆடிவிட்டால், அதன் பிறகு விராட் கோலி இந்த வடிவத்தில் மீண்டும் வருவது கடினம்.
நான் இந்தியாவாக இருந்தால் நிச்சயம் அவரை அணியில் வைத்திருப்பேன், ஏனெனில் நான் அவருடைய உயர்வுப்பக்கங்களையே பார்ப்பேன். அவரை பார்முக்கு கொண்டு வந்து ஆடவைத்து விட்டால், அவருடைய இடத்தில் ஆடி ஷைன் பண்ணிய அந்த வீரரை விட கோலியின் பார்ம் திரும்புதல் எதிரணிக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும்.
அதனால் நான் என்ன சொல்வேன் என்றால், கோலியைக் கூப்பிட்டு ரிலாக்சாக இரு, ரிலாக்சாக ஆடு. என்று கூறி அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் விட்டு விடுவேன், மீண்டும் சுவிட்ச் போட்டு அவர் விளக்கு எரியும் வரை காத்திருப்பேன், ரன்கள் வரும். அவரை பார்முக்குக் கொண்டு வர இந்திய பயிற்சியாளர்கள் புதிய வழியைக் கண்டுப்பிடிக்க வேண்டும். அதற்கு அவர் இறங்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருத்தல் நல்ல உபாயம் அல்ல’ என்று கூறுகிறார் ரிக்கி பாண்டிங்.