”என்னடா இது நல்லா ஆடிய SKY எனும் ஆகாயத்துக்கு வந்த சோதன.. இனி சூர்யகுமார் இந்திய அணியின் ஆடமாட்டார்” – ரோஹிட் பகீர் தகவல்
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி போராடி வெற்றிபெற்றது. இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, ”இன்று பேட்டர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். இப்படியொரு ஆட்டத்தை விளையாட வேண்டும் என்றுதான் நான் ஆசைப்பட்டேன். இந்திய அணி பேட்டிங் வரிசையில் அனைவரும் பங்களிப்பை வழங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். தற்போது இந்திய அணியில் உள்ள முக்கிய பிரச்சினை பந்துவீச்சு துறைதான்.
கடந்த 5-6 போட்டிகளில் டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார்கள். இன்றைய போட்டியிலும் படுமோசமாக சொதப்பினார்கள். டெத் ஓவர் பௌலிங்தான், ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். தொடர்ந்து இதேபோல் செயல்பட்டு வருவது கவலையான விஷயம்தான். இந்திய பௌலர்களால் விரைந்து தங்களது குறைகளை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் இனி டி20 உலகக் கோப்பைவரை ஒரு போட்டியில்கூட விளையாட மாட்டார். நேரடியாக அக்டோபர் 23ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்குவார்” எனக் கூறினார்.