ஆள் பாக்கத் தான் ஒல்லி.. ஆனா ஆட்டத்தில கில்லி.. ஒரே போட்டியில் சாதனைகளை அடுக்கடுக்காக குவித்த சூர்யகுமார்

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி போராடி வெற்றிபெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியிலும் சூர்யகுமார் பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக சர்வதேச டி20 போட்டிகளில் மிகவும் குறைந்த பந்துகளில் (573 பந்துகள்) ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

★ குறைவான பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:- 573 பந்துகள் – சூர்யகுமார் யாதவ் 604 பந்துகள்- கிளென் மேக்ஸ்வெல் 635 பந்துகள்- கொலின் மன்றோ 640 பந்துகள்- எவின் லூயிஸ் 654 பந்துகள்- திசர பெரேரா அதே போல் டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த (இன்னிங்ஸ் அடிப்படையில்) வீரர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

★அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியல்:- விராட் கோலி – 27 இன்னிங்ஸ் கேஎல் ராகுல் – 29 இன்னிங்ஸ் சூர்யகுமார் யாதவ் – 31 இன்னிங்ஸ் மற்றொரு சாதனையாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுலுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

★இந்தியாவுக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் யுவராஜ் சிங் – 12 பந்துகள் லோகேஷ் ராகுல் – 18 பந்துகள் சூர்யகுமார் யாதவ் – 18 பந்துகள் ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சூர்யகுமார் யாதவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *