Cricket
இடையில் வெளியேறிய ரோஹிட்.. தோல்வியின் பயத்திலா ரோஹிட்டின் மூக்கிலிந்து ரத்தம் வடிந்தது.. உண்மையில் நடந்தது என்ன ?

2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸின் 12வது ஓவரில் ரோஹித் ஷர்மா பெவிலியன் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கவுகாத்தியில் நடந்த போட்டியின் போது அதிக ஈரப்பதம் காரணமாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியது. அவர் ஆரம்பத்தில் இரத்தத்தை நிறுத்த துண்டைப் பயன்படுத்தினார், ஆனால் இறுதியில் பெவிலியன் திரும்பி சிகிச்சை மேற்கொண்டார். அவருடன் அருகில் தினேஷ் கார்த்திக் இருந்து என்ன ஆனது என்பதை பார்த்து கொண்டிருந்தார். பின்பு மீண்டும் மைதானத்திற்குள் வந்து பீல்டிங் செய்தார்.