ஒவ்வொரு மேட்சுலயும் 200 ரன் அள்ளிக் கொடுக்கிறது.. இதுல உலகை வேற ஜெயிக்கிறயாம்.. என்னடா இது நம்பர் 1 டீமுக்கு வந்த சோதன. டி20 உலகை ஜெயிக்க முன்னாடி சொந்த நாட்டுல ஜெயிங்க… இந்திய அணியின் பரிதாப நிலை

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இந்தூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக ருச்சோவ் 100ழூ ரன்களும், டி காக் 68 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா (0) மற்றும் ரிஷப் பண்ட் (27) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய வீரர்களில் தினேஷ் கார்த்திக் (46) மற்றும் தீபக் சாஹர் (31) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்க தவறியதால், 18.3 ஓவரில் 178 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.