Cricket
மோசமான ஃபார்முக்கு என்ன ரீசன்னு இப்பதான் விளங்குது. – இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் !

ராதிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்.ரஹானேவுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது. அஜிங்கியா ரஹானேவுக்கும், ராதிகா என்ற பெண்ணிற்கும் கடந்த 2014ல் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2019ல் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது ராதிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

அதன்படி கணவர் மற்றும் மகளுடன் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ராதிகா வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘அக்டோபர் 2022’ என பதிவிட்டுள்ளார். அதாவது அக்டோபரில் தனக்கு குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.