Cricket

தென்னாபிரிக்க வீரர் காலால் விக்கெட்டை தட்டிவிட்டும், அது அவுட் இல்லை என அம்பையர் சொல்ல காரணம் என்ன தெரியுமா ?

இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்க வீரர் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து அது அவுட் என நடுவரினால் கருதப்படவில்லை. அதற்கு காரணம் கீழே தரப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா (0) மற்றும் ரிஷப் பண்ட் (27) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் தினேஷ் கார்த்திக் (46) மற்றும் தீபக் சாஹர் (31) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்க தவறியதால், 18.3 ஓவரில் 178 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Mohamed Siraj Free Hit பந்தை வீசும் முன்னர் காலால் Rossouw Stump யை தட்டி விட்டார்.
ஆனாலும் Free Hit பந்து என்பதால் அதனை ஆட்டமிழப்பாக கருதாமல், அடுத்த பந்து Free Hit பந்தாக வீசப்பட்டது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button