”ஒரு மேட்ச் நல்லா ஆடினா, ஒம்பது மேட்ச்… சூர்யகுமாரின் பார்ம் கவலைக்குரியதாக இருக்கிறது” – புலம்பும் இந்திய கேப்டன் ரோஹிட்

இந்திய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட இருபக்கு 20 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி ஆறுதல் வெற்றிபெற இந்திய அணி தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவதும், இறுதியுமான போட்டி நேற்று முன்தினம் இந்தூரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ரிலீ ரோசோவ்வின் அதிரடி சதத்துடன் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து 228 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர் முடிவில் 178 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற இந்திய அணி தொடரை வென்றது. இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இப்போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் ஷர்மா,

”இப்போட்டியில் வெற்றி, தோல்வி ஒரு பொருட்டே அல்ல என போட்டி துவங்குவதற்கு முன்பு வீரர்களிடம் தெரிவித்தேன். தங்களை தாங்களே மேம்படுத்திக்கொள்ள இது சரியான வாய்ப்பு. அணியில் சில குறைகள் இருக்கிறது. சூர்யகுமார் யாதவின் பார்ம் கவலைக்குரியதாக இருக்கிறது” எனக் கூறினார். உடனே குறுக்கிட்ட நெறியாளர் என்ன சொன்னிங்க ரோஹித்? எனக் கேட்டார். அதனைத் தொடர்ந்து ரோஹித் சிரிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து பேசிய ரோஹித், ”சும்மா சொன்னேன்… இந்திய அணியில் பந்துவீச்சு துறைதான் பிரச்சினையாக இருக்கிறது. அதனை டி20 உலகக் கோப்பைக்கு முன்பே சரிசெய்துவிடுவோம் என நம்புகிறேன்.

ஆஸிக்கு முன்கூட்டியே செல்ல காரணம், அணியில் இருக்கும் வீரர்களில் 7-8 பேர் மட்டுமே இதற்குமுன் ஆஸியில் விளையாடியிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு மைதானங்கள் புதிது. இதனால்தான், முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு சென்று சில பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளோம். பவுன்சருக்கு பேர்போன பெர்தில் விளையாட விரும்புகிறோம். பும்ரா விலகிவிட்டார். அவருக்கான மாற்று பௌலரை இன்னமும் தேர்வு செய்யவில்லை. ஆஸி பிட்ச்களில் அனுபவம் வாய்ந்தவர்களை பரிசீலித்து வருகிறார்கள். எந்த பௌலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்னமும் தெளிவாகவில்லை” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *