டி20 கிரிக்கெட்டில் அசால்டாக 200 ஓட்டங்களை வாரி வழங்கும் இந்திய பவுலர்கள் – உலகை ஜெயிக்கும் டீமுக்கு வந்த வேதனையான சாதனை
2022ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆஸி. வில் ஆரம்பமாகும் நிலையில் இந்திய அணி படைத்துள்ள மோசமான சாதனை ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. மூன்று போட்டிகளில் இந்திய அணி முதல் இரு போட்டிகளில் வென்றதன் மூலமாக தொடரை 2-1 என கைப்பற்றியது, நேற்றைய போட்டியில் இந்திய அணி 49 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டி உலக கிண்ணத்திற்கு முன்னர் இந்தியா விளையாடிய இறுதி சர்வதேச வு20 போட்டியாக இந்த போட்டி அமைந்தது. இந்தியா 200 ஓட்டங்களில் வாரி வழங்கும் வள்ளலாக இந்த ஆண்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக 2004 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 6 தடவைகள் 200க்கும் அதிகமான ஓட்டங்களை விட்டுக் கொடுத்த இந்தியா, இந்த ஆண்டில் மட்டும் ஆறு தடவைகள் 200 அதிகமான ஓட்டங்களை விட்டுக் கொடுத்துள்ளது.