”தினேஷ் கார்த்திக் எனது இடத்தில் களமிறங்கி அபாரமாக விளையாடினார். இவரால் இந்திய அணியில் எனது இடம் பறிபோக அதிக வாய்ப்பு இருக்கிறது” – அச்சப்படும் சூர்யகுமார்

இந்திய அணிக்கும் சவுத் ஆபிரிக்க அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் நிறைவுக்கு வந்தது. இதில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் தொடரின் சிறப்பாட்டக் காரராக தெரிவானார். மூன்றாவது டி20 போட்டியின் போது தமிழக வீரராக தினேஷ் கார்த்திக் 4வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடினார். அவரின் ஆட்டமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் போட்டி முடிந்தப் பிறகு சூர்யகுமார் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பேசிய சூர்யகுமார் யாதவ், ”தினேஷ் கார்த்திக் நான்காவது இடத்தில் களமிறங்கி அபாரமாக விளையாடினார். இவரால், எனது இடம் இந்திய அணியில் பறிபோக அதிக வாய்ப்புகள் இருக்கிறது” என சிரித்துக்கொண்டே பேசினார்.
இந்திய அணியில் தற்போது இருக்க கூடிய பேட்டர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே தரமான பார்மில் இருக்கிறார். இவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இவர் சொற்ப ரன்களை மட்டும் அடித்துவிட்டு ஆட்டமிழந்துவிட்டால், இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படும் என சொல்லும் அளவுக்கு சூர்யகுமாரின் ஆட்டம் அபாரமாக இருக்கிறது.