Cricket
டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் ஓவரிலேயே ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனை பவுலர் யார் தெரியுமா ?

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரர் மைக்கல் பிரேஸ்வல், இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் தனது முதலாவது ஓவரில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் மைக்கல் பிரேஸ்வல் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
தனது முதல் போட்டியில் பிரேஸ்வல் ஓவர்களை வீசாத நிலையில், இந்த போட்டியில் முதன்முறையாக பந்துவீச அழைக்கப்பட்டார். 14வது ஓவரை வீசிய அவர் மார்க் அடைர், பெரி மெக்கார்த்தி மற்றும் கிரைக் யங் ஆகியோரை ஆட்டமிழக்கச்செய்து தன்னுடைய முதல் ஓவரிலேயே ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை பதிவுசெய்தார். மேலும் நியூசிலாந்து அணிக்காக இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துக்கொண்டார்.