Cricket

முதல் 12 பால்களில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் விளாசினால் மூன்றாவது பவர்பிளேவினை பேட்டிங் செய்யும் அணிகள் அன்-லாக் செய்யலாம் – ‘THE 6IXTY’ கிரிக்கெட் தொடரின் முழு விதிகள் உள்ளே

கிரிக்கெட் விளையாட்டு நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தில் வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் 5 நாட்கள் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளானது தற்போது வெறும் 4 மணித்தியாலங்களுக்குள் நிறைவுபெறும் அளவுக்கு அப்படியோ சுருங்கிப் போயுள்ளது. கிரிக்கெட் உலகில் பல விதமான போட்டிகள் நடைபெற்று வந்தாலும் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது குறிப்பிட்ட சில போட்டிகளுக்கே அனுமதி வழங்கியிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளுக்கு வித்தியாசமாக ஏராளமான நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் கிரிக்கெட் விளையாட்டில் ‘THE 6IXTY’ என்ற ஃபார்மெட்டை அறிமுகம் செய்துள்ளது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் கரிபியன் பிரீமியர் லீக். இந்த ஃபார்மெட் கிரிக்கெட் விளையாட்டில் புதுப் பாய்ச்சலை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1877-இல் கிரிக்கெட் உலகில் முதல் டெஸ்ட் போட்டி விளையாடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அந்தப் போட்டி விளையாடப்பட்டு சுமார் 145 ஆண்டுகள் கடந்த நிலையில் த சிக்ஸ்டி என்ற ஃபார்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அப்படியே ஒருநாள், டி20, டி10 என கமர்ஷியல் வடிவம் பெற்றது. இப்போது அது மற்றொரு வடிவத்தை பெற்றுள்ளது. இந்த புதிய ஃபார்மெட்டின் முதல் எடிஷன் வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது விதமான முயற்சிகளின் மூலம் டி10 கிரிக்கெட்டை மாற்றும் வகையில் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் கரிபியன் பிரீமியர் லீக்கின் கூட்டு முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபார்மெட்டின் புதிய விதிகள்

பேட்டிங் செய்யும் அணிகளுக்கு அதிகபட்சம் ஆறு விக்கெட்டுகள் வழங்கப்படும். ஆறாவது விக்கெட் வீழ்ந்தால் ஆல் அவுட் ஆனதாக எடுத்துக் கொள்ளப்படுமாம்.

பேட்டிங் செய்கிற ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பவர்பிளே ஓவர்கள் உண்டாம். முதல் 12 பந்துகளில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் விளாசினால் மூன்றாவது பவர்பிளேவினை பேட்டிங் செய்யும் அணிகள் அன்-லாக் செய்ய முடியுமாம். அதை 3 முதல் 9-வது ஓவருக்குள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாதியில் 30 பந்துகளும் ஒரே எண்டிலிருந்து பந்து வீசப்படுமாம். அடுத்த 30 பந்துகளுக்கு மற்றொரு எண்ட் பயன்படுத்தப்படுமாம்.

ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சம் ஒரு பவுலர் 2 ஓவர்கள் மட்டுமே வீச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 பந்துகளில் 5 ஓவர்களாக வீசப்படுமாம்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணிகள் 60 பந்துகளையும் வீச தவறினால் கடைசி 6 பந்துகளின்போது ஒரு ஃபீல்டர் வெளியேற்றப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரசிகர்கள் ஆட்டத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மிஸ்ட்ரி ஃப்ரீ ஹிட்டாக தேர்வு செய்வார்களாம். அந்த சமயத்தில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாக முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button