16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி ஒரு No-Ball கூட வீசாத அந்த சாதனை பந்துவீச்சாளர் பவுலர் யார் தெரியுமா ?

தன்னுடைய நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் ஆசையாக காணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வீரர்களும் சிறு வயதில் இருந்து முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள். கிரிகெட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிநிகர் பங்குண்டு. ரன் அ டிப்பது பேட்ஸ்மேன் கடமை என்றால், அந்த ரன்கள் அ டிக்காமல் பேட்ஸ்மேனைக் கட்டுப்படுத்துவது பவுலர்களின் திறமை. இதில், பந்துவீசும்போது பவுலர்கள் சில தவ றுகளை செய்ய வாய்ப்பிருக்கிறது. நோபால், வைட் உள்ளிட்ட பந்துகளை வீசும்போது எதிரணியினருக்கு கூடுதல் ரன்களாக மாறும்.

இப்படியான எக்ஸ்டிரா ரன்கள் ஒருப்போட்டியின் முடிவைக் கூட மாற்றக்கூடியவையாக அமைந்துவிடும். இப்படி நோ போல் மற்றும் வைட் பந்து வீசாத வீரர்களே பாராட்டப்படக்கூடிய வீரர்களாக காணப்படுகின்றனர். ஆனால் பல பந்துவீச்சாளர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு நோ பால் கூட வீசாதவர்கள் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய பந்து வீச்சாளர் ஒருவரும் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், 1983 உலகக் கோப்பை வென்றவருமான கபில் தேவ் தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர். கபில்தேவ் 1978 முதல் 1994 வரை 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். ஆனால், தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் ஒரு நோ போல் கூட வீசவில்லை. இந்த சாதனையை படைத்த ஒரே இந்திய பந்து வீச்சாளர் கபில்தேவ் மட்டுமே.