(பேசாம ஓய்வ அறிவிச்சிரு சிவாஜி) கோலிக்கு சோதனை மேல் சோதனை… 7 ஆண்டுகளின் பின்னர் ஒருநாள் தரவரிசையில் கோலிக்கு ஏற்பட்ட சோதனை.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இவ்வாறான நிலையில் புதிதாக வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டாப் 4 இடங்களில் இடம்பிடிக்க தவறியுள்ளார் அவர். கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.

கோலி இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அவருக்கு இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் கோலி.
கடந்த 2015 அக்டோபருக்கு பிறகு முதல் முறையாக இந்த தரவரிசையில் டாப் 4 இடங்களை இப்போதுதான் தவறவிட்டு உள்ளார். இப்போது 774 புள்ளிகளுடன் கோலி உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம், இமாம்-உல்-ஹாக் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்க அணியின் ராசி வான்டர் டுசன் மற்றும் டிகாக் உள்ளனர்.