இந்திய அணியை ஆசியக் கிண்ணம் மற்றும் T20 உலகக்கிண்ண தொடர்களில் வெற்றி பெற வைப்பது தான் எனது இலக்கு – கிழிஞ்சது போ…

அண்மைக்காலமாக தனது மோசமான துடுப்பாட்ட ஃபார்மில் தவித்துவரும் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி, இந்திய அணிக்காக எதுவும் செய்வேன் என தெரிவித்துள்ளார். மோசமான ஃபார்ம் காரணமாக பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள கோஹ்லி, தன் மீதான விமர்சனங்களை புறந்தள்ளியுள்ளார். முன்னாள் வீரர்கள் பலர் கோஹ்லிக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டுவரும் நிலையில் கோஹ்லி தனது இலக்கு குறித்து கூறியுள்ளார்,

‘என்னுடைய முக்கிய இலக்கு என்னவென்றால், இந்திய அணியை ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக்கிண்ண தொடர்களில் வெற்றி பெற வைப்பது தான். மேலும், என் அணிக்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அண்மையில் நிறைவுக்குவந்த டி20 தொடரில் 12 ஓட்டங்களும், ஒருநாள் தொடரில் 33 ஓட்டங்களுமே அதிகபட்சமாக கோஹ்லி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.