Cricket

ஐ.பி.எல்லில் கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்களை விளாசி பினிஷர் என்பதை நிரூபித்த வீரர்கள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரில் தனக்கு பிடித்த பேட்ஸ்மேன், சிக்ஸர் அ டிப்பதை காண, ஒவ்வொரு பந்தையும் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்தான் ஏராளம். விறுவிறுப்பான கட்டமாக இருக்கும் கடைசி ஓவரில், அ டிக்கப்படும் சிக்ஸர்களுக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மசுவு இருக்கும். காரணம், அந்த கடைசி ஓவரை எதிரணியின் தரமான வேகப்பந்து வீச்சாளர்தான் வீசுவார். அவருக்கு எதிராக தில்லாக, தைரியமாக சிக்ஸர் அ டிப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒருசிலர் மட்டுமே தொடர்ந்து, கடைசி ஓவர்களில் சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்கள். அவர்களில் டாப் 3 வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.


3.ரோஹித் ஷர்மா
இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மா இடம் பெற்றிருப்பது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. காரணம், இவர் ஓபனராக களமிறங்க கூடியவர். 15 ஓவர்கள்வரை தாக்குப்பிடிப்பதே அபூர்வம்தான். இந்நிலையில், அவர் கடைசி ஓவர்கள்வரை தாக்குப்பிடித்து, அந்த கடைசி ஓவரில் இதுவரை 23 சிக்ஸர்கள் அ டித்து, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

2.கெய்ரன் பொல்லார்ட்
இவரும் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சார்ந்தவர்தான். டெத் ஓவர்களில் அதிக ரன்களை குவிப்பதுதான் இவரது வேலை. எப்படிப்பட்ட பௌலர், எப்படிப்பட்ட பந்து என்றெல்லாம் பார்க்காமல், அசால்ட்டாக சிக்ஸர்களை அ டிக்கும் ஆற்றல் பெற்றவர். இதுவரை கடைசி ஓவரில் 30 சிக்ஸர்களை அ டித்து, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

1.தோனி
தோனி உலகின் தலைசிறந்த பெஸ்ட் பினிஷர்களில் இவர் முதன்மையானவராக இருக்கிறார். போட்டியை கடைசிவரை எடுத்துக்கொண்டுபோய், கடைசி ஓவரில் சிக்ஸர்களை விளாசி வெற்றியை பெற்றுக்கொடுப்பதுதான் இவரது வழக்கம். இதனால், கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்கள் அ டித்தோர் பட்டியலில் 50 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் பொல்லார்டுக்கும், தோனிக்கும் இடையில் உள்ள சிக்ஸர்கள் வித்தியாசத்தை பார்த்தாலே தெரிந்துவிடும், தோனியை பெஸ்ட் பினிஷிர் என ஏன் கூறுகிறோம் என்று.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button