Video | நடு வானில் பறந்த பந்தை விமானம் போல் பறந்து கேட்ச் பிடித்த தென்னாபிரிக்க இளம் வீரர்.. முழு ரசிகர்களும் உறைந்து போன கேட்ச் இது

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணியின் இளம் வீரர் பிடித்த கேட்ச் இன்று முழு உலகிலும் வைரலாகியுள்ளது. 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து நடந்த 2வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. மூன்றாவது கடைசி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி மிரட்டல் வெற்றிபெற்றது.

இந்த ஆட்டத்தில், 192 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி சார்பில் களமாடி விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர் மொயீன் அலி, ஐடன் மார்க்ரம் வீசிய 9.6 வது ஓவரில், அவரது ஆப்-சைடில் தூக்கி அடிக்க முயற்சித்தார். அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பந்தை நடுவானில் பிடிக்க விரைவாக தரையில் இருந்து குதித்தார். பந்தும் லாவகமாக அவரது கையில் சிக்கிக்கொண்டது. இதனால், மொயீன் அலி 3 ரன்னுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது ஒரு கையால் டைவிங் கேட்சை எடுத்தது பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கேட்சை தாவிப்பிடித்த வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட வரும் இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், ‘கிரிக்கெட்டில் இது மிகச்சிறந்த கேட்ச்’ என்று வர்ணித்து வருகின்றனர்.
https://youtu.be/AIWIs5wcmRc