‘நான் ஒரு சிறந்த வீரராக மாற என்னை எப்பொழுதுமே ஊக்கப்படுத்தி பேசியவர் எனது அம்மா தான்… ஆனால் இப்போது என் அம்மா…’ – மனம் உருகி பேசிய நேற்றைய நாளின் ஹீரோ

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை தற்போது ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒபெட் மெக்காய் திகழ்ந்தார்.

இந்த போட்டியில் மொத்தம் நான்கு ஓவர்கள் வீசிய அவர் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசியிருந்த மெக்காய் கூறுகையில் : இந்த போட்டியை எனது தாய்க்காக நான் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். என்னுடைய கிரிக்கெட் கரியரில் நான் ஒரு சிறந்த வீரராக மாற என்னை எப்பொழுதுமே ஊக்கப்படுத்தி பேசியவர் எனது அம்மா தான்.
அவர்களுக்காக இந்த செயல்பாட்டை நான் அர்ப்பணிக்கிறேன். இந்த போட்டியில் முதல் விக்கெட் விழுந்ததுமே இந்திய அணி சற்று அழுத்தத்திற்குள் வந்திருக்கும் என்று நினைத்தேன். அதனாலேயே பவர் பிளேவிற்குள் இன்னும் சில விக்கெடுகளை கைப்பற்ற நினைத்தேன். இந்த போட்டியில் என்னால் மிகச் சிறப்பாக செயல்பட முடிந்தது. பந்துவீச்சில் கூடுதலாக எதையும் புதிதாக செய்ய வேண்டும் என்று யோசிக்காமல் என்னுடைய திறனுக்கு ஏற்றவாறு பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் மெக்காய் பேசியது குறிப்பிடத்தக்கது.