Cricket

ஐ.பி.எல் மூலம் கோடி கோடிகளாக சம்பாதித்த இந்தியா தவிர்ந்த முதல் 7 நாடுகள் !!

2020ஆம் ஆண்டு தொடரை வைத்து தயாரிக்கப்பட்ட பட்டியல்.

2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல்லில் இருந்து அதிக பணம் சம்பாதித்த முதல் ஏழு வெளிநாடுகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1. அவுஸ்திரேலியா – 653.81 கோடி
சர்வதேச கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி ஐ.பி.எல் தொடராக இருந்தாலும் சரி, எட்டாத உயரத்தில் இருக்கும் நாடு என்றும் அவுஸ்திரேலியா தான். 2020 ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தின் போது கொல்கத்தா அணி, பேட் கம்மின்ஸை 15.5 கோடிக்கு வாங்கினர். இதுவே ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு தனிப்பட்ட வெளிநாட்டு வீரருக்கு செலுத்திய அதிகபட்ச தொகை ஆகும். கடந்த 13 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா நாட்டு வீரர்கள் 650 கோடிக்கும் மேற்பட்ட பணத்தைச் சம்பாதித்து உள்ளனர்.

2. தென்னாப்பிரிக்கா – 428.64 கோடி
ஏ.பி டிவில்லியர்ஸ் தனது 360 டிகிரி ஷாட்டின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தாலும் ஐ.பி.எலில் தொடர்ந்து தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துகிறார். ஏ.பி டிவில்லியர்ஸை தவிர ஸ்டெய்ன், மில்லர், இங்கிடி, டு பிளசிஸ் ஆகியோர் பல ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்கா வீரர்கள் 428.64 கோடி ரூபாய் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர்.

3. மேற்குஇந்திய தீவுகள் – 279.89 கோடி
டி20 கிரிக்கெட் என்றாலே மேற்கு இந்திய தீவுகள் அணியே! இரண்டு முறை ஐசிசி டி20 உலக கோப்பையை வென்றுள்ளனர். அந்த நாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடர் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல தொடர்களில் விளையாடுகிறார்கள். ஐ.பி.எலில் அதிரடியாக ஆடிய வீரர்கள் கிரீஸ் கெயில், போலார்டு, நரைன், ரஸ்ஸல் என நிறைய பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆக மொத்தம் 280 கோடி ரூபாய் ஐ.பி.எலில் இருந்து சம்பாதித்து உள்ளனர்.

4. இலங்கை – 191.43 கோடி
ஐ.பி.எல் தொடரில் ஒரு காலத்தில், இலங்கை வீரர்கள் ஐ.பி.எல் ஆதிக்கம் செலுத்தினர். ஜெயவர்த்தனே, ஜெயசூரியா, டில்சன், முரளிதரன், சங்ககரா, மலிங்கா ஆகியோர் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடியவர்கள். இன்றும் ஐ.பி.எலில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கும் வீரர் இலங்கையைச் சேர்ந்த லசித் மலிங்கா. 2019ஆம் ஆண்டு கடைசி பந்தில் விக்கெட் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி கோப்பையை முத்தமிட உதவின்னர். ஆனால் 2020 ஐ.பி.எலில் அவர் பங்கேற்கவில்லை.

5. நியூசிலாந்து – 157.71 கோடி
இங்கிலாந்து நாட்டு வீரர்களை விட 6 கோடி அதிகம் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கும் நாடு நியூசிலாந்து. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் சதத்தை அடித்த வீரர் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த பிரென்டன் மெக்கல்லம் ஆவார். டிரெண்ட் போல்ட்டும் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்தவரே. தற்போது விளையாட்டு வீரர்களை தவிர பிரென்டன் மெக்கல்லம், மைக் ஹெஸ்ஸன் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸின் ஸ்டீபன் ப்ளம்மின்ங் பயிற்சியாளர்ளாக பணியாற்றி வருகிறார்கள்.

6. இங்கிலாந்து – 151.36 கோடி
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது நாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதை அதிகம் விரும்பமாட்டார்கள். காரணம் ஐ.பி.எல் தொடர் நிறைவுறும் சமயத்தில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் ஐ.பி.எலில் விளையாடாமல் அவர்களது நாட்டிற்காக விளையாட வர வேண்டும் என்று நினைப்பர். 2017ஆம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடிக்கும், 2018ஆம் ஆண்டு 12.5 கோடிக்கும் விலை போனார். மற்ற இங்கிலாந்து வீரர்கள் ஆர்ச்சர், மோர்கன், சுட்டிக் குழந்தை சாம் கர்ரன் ஆகியோரும் நல்ல விலைக்கு ஏலத்தில் இருந்து எடுக்கப்பட்டனர். மொத்தமாக 151.36 கோடி ரூபாய் ஐ.பி.எலின் மூலம் சம்பாதித்து உள்ளனர்.

7. பங்காளதேசம் – 28.58 கோடி
பங்காளதேச அணி சர்வதேச கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறி வருகிறது. இருப்பினும் அந்த நாட்டின் வெற்றிக்காக அதிகம் பங்களித்த ஷகிப் அல்ஹாசன் மற்றும் முஷ்டாபிசுர் ரகுமான் மட்டுமே ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் அணிக்காக மட்டுமின்றி ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை மாற்றியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button