‘இந்த உலகத்த ஜெயிக்கிறதுக்கு முன்னாடி ஆசியாவுல கொடிய பறக்க விடுவோம்’ – ஆசிய கிண்ண தொடர் குறித்து வெறித்தனமாக பேசிய இந்திய கேப்டன்
ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கிடையில் நடைபெறும் ஆசியக்கிண்ண கிரிக்கெட் ஆரம்பமாக இன்னும் ஓரிரு வாரங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் 40 செகண்ட் புரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27 முதல் செப்டம்பர் 11 வரையில் இந்தத் தொடரை நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை என ஆறு அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. ஆறாவது அணிக்கான தகுதி சுற்றில் தேர்ச்சி பெறும் அணி இந்தத் தொடரில் விளையாடும். இந்த தொடர் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தகுதி பெறும் அணியும் குரூப் ‘ஏ’ சுற்று போட்டியில் விளையாடுகின்றன. இந்நிலையில், இதற்கான புரோமோ வீடியோ இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனை இந்த தொடரை ஒளிபரப்ப உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘இந்திய அணியின் ஆசிய கோப்பை சாதனை தொடங்கி டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணி, புதிய உலக சாதனை படைப்பது போன்ற பெருமைகள் எல்லாம் இதில் மட்டுமே இருக்கிறது. உலகத்த ஜெயிக்கிறதுக்கு முன்னாடி ஆசியாவுல கொடிய பறக்க விடுவோம்’ என புரோமோவில் ரோகித் சொல்கிறார்.