Cricket

‘நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் அஸ்வினை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்ய மாட்டேன். சஹால் தான் என்னுடைய முதல் தேர்வாக இருப்பார்’ – தமிழனுக்கு தமிழன் தான் எதிரி

2022 டி20 உலகக்கிண்ணம் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அனுபவ சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 மாதங்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் தொடரின் வாயிலாக இந்திய டி20 அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2010இல் அறிமுகமான இவர் தனது சிறந்த செயல்பாடுகளால் அடுத்த சில வருடங்களிலேயே 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்தார். ஆனால் அவரை வளர்த்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2017இல் விலகிய நிலையில் சில மாதத்திலேயே இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் போது ஒருசில போட்டிகளில் சுமாராக பந்துவீசினார் என்பதற்காக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அவரை அதிரடியாக நீக்கினார்.

மேலும் சஹால் – குல்தீப் யாதவ் ஆகியோரை முதன்மை சுழல் பந்துவீச்சு ஜோடியாக கொண்டு வந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் குல்தீப் யாதவை கொண்டு வர முயற்சித்தார். அப்படியே காலங்கள் உருண்டோடியதால் இந்திய வெள்ளை பந்து அணியில் அஷ்வினின் கேரியர் முடித்து விட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனாலும் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் 2020 வாக்கில் சஹால் – குல்தீப் ஆகிய இருவருமே பார்மை இழந்து சுமாராக பந்து வீசினர்.

அத்துடன் பிசிசிஐயில் விராட் கோலியின் ஆதிக்கமும் நிறைவுக்கு வந்ததால் ஆச்சர்யப்படும் வகையில் துபாயில் நடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் விளையாட நேரடியாக அஷ்வின் தேர்வு செய்யப்பட்டார். அதில் முழுமையாக வாய்ப்பு பெறாத போதிலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு பின்னர் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். அதன்பின் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் பங்கேற்று காயத்தால் வெளியேறிய அவரை தேர்வுக்குழுவும் அத்தோடு கழற்றி விட்டது.

ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் ஜோஸ் பட்லருடன் நிறைய போட்டிகளில் டாப் ஆர்டரில் களமிறங்கி நல்ல ரன்களை எடுத்த அவர் கேரியரில் முதல் முறையாக அரைசதம் அ டித்து பந்து வீச்சிலும் அசத்தி மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டார். இருப்பினும் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களில் அவரை கண்டு கொள்ளாத தேர்வுக் குழு தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் தேர்வு செய்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஜடேஜா – சாஹல் இருப்பதால் இந்திய டி20 அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேவையின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் தமிழக இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்,

தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் அவரை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இது பற்றி இத்தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் பேசியது பின்வருமாறு. ‘அஷ்வின் எதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது பெரிய கேள்வி என்பதுடன் அனைவருக்கும் குழப்பமாகவும் உள்ளது. ஏன் அவரை நீக்கவில்லை, பின்பு ஏன் அவரை நீக்கினீர்கள். அதன்பின் ஏன் இங்கிலாந்து டி20 தொடரில் தேர்வு செய்யவில்லை? ஏன் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்துள்ளீர்கள்.

‘ஏனெனில் உங்களிடம் முதல் சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜாவும் இரண்டாவதாக சஹால், அக்சர் படேல், அஷ்வின் ஆகியோரும் வருவார்கள். இந்த நால்வரில் இருவர் மட்டுமே தேர்வாக போகிறார்கள். ஒருவேளை அஷ்வின் ஆல்-ரவுண்டர் திறமையால் தேர்வாகலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை மணிக்கட்டு ஸ்பின்னராக இருக்கும் சஹால் தான் உலககோப்பைக்கு என்னுடைய முதல் தேர்வாக இருப்பார்’ என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button