சும்மா இருக்க முடியவில்லை.. மீண்டும் கிரிக்கெட் விளையாட தயார் என்ற கங்குலி ! மீண்டும் அந்த வெறித்தனமான ஆட்டத்தை பார்க்க ரெடியா ?

உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக நிரூபித்த வீரர்கள் ஒரு கட்டத்தில் வயதின் காரணமாக ஓய்வு பெறும் நிலையை சந்திக்கின்றனர். ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்ற லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் கடந்த ஜனவரி மாதம் டுபாயில் நடைபெற்றது. இந்திய மஹாராஜாஸ், ஆசிய லயன்ஸ், உலக ஜெய்ன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் சம்பியன் பட்டத்தை உலக ஜெய்ன்ட்ஸ் அணி வென்றது.

இந்நிலையில் இந்த தொடரின் 2-வது சீசன் வரும் செப்டம்பர் 20 முதல் ஒக்டோபர் 10 வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த தொடர் மிகப்பெரிய வெற்றி கண்டதால் இம்முறை இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் மேலும் சில நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் வீரர்களை சேர்க்க அதை நடத்தும் நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இந்திய லெஜெண்ட்ஸ் அணியில் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2008இல் சர்வதேச கிரிக்கட்டில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் சில வருடங்கள் விளையாடி பின்னர் வர்ணனையாளராக செயல்பட்டு கடந்த 2019 முதல் பிசிசிஐ தலைவராக செயல்பட்டு வருகிறார். சமீப காலங்களில் அவரின் ஆட்டத்தை பார்க்க முடியாமல் இருக்கும் அவரின் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த லெஜெண்ட்ஸ் தொடரில் விளையாட உள்ளதாக அவரே அறிவித்துள்ளார்.