தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்க: பேரவையில் பாமக எம்எல்ஏ கோரிக்கை

தமிழர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப்.11) நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், “தமிழகத்தில் உள்ள இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்கும் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதப்பாருங்க> ரோகித் சர்மாவை வீழ்த்துவது சாதாரணம்.. அப்படி பேசினாரா துஷார் தேஷ்பாண்டே? வதந்திக்கு விளக்கம்!

இப்போட்டியில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. எனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இதப்பாருங்க> ‘அவருக்கு நிறைய திறமைகள் உள்ளன ஆனால்…’: ‘புதிய கேப்டனின் கீழ் விளையாடு’ அச்சுறுத்தலுக்குப் பிறகு சிஎஸ்கே பந்துவீச்சாளர் மீது எம்எஸ் தோனியின் அப்பட்டமான தீர்ப்பு

தமிழகம் சார்பில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணியாக சிஎஸ்கே அணி விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் வர்த்தக லாபத்தை ஈட்டுகிறது. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார். இந்தக் கோரிக்கைக்கு அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இதப்பாருங்க> அவர்களிடம் இல்லாதது என்னிடம் உள்ளது! அதனால் தான் பீல்டிங் குறித்து ரவீந்திர ஜடேஜாவின் கருத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *