Cricket

‘தோனி அணியில் இருப்பதால்தான் இதெல்லாம் நடக்கிறது’ – புகழாராம் சூட்டிய கான்வே!

எம்.எஸ். தோனி அணியில் இருப்பதால், நாட்டின் எந்தப் பகுதியில் சென்று ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற எண்ணத்தை தருவதாக சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் கான்வே புகழாராம் சூட்டியுள்ளார்.

இதப்பாருங்க> ஜடேஜாவுக்கு பிறகு டெவோன் கான்வே ஜொலிக்க, சென்னை ஐதராபாத்தை மோசமாக வீழ்த்தியது

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதப்பாருங்க> 41 வயதிலும் தோனியின் சுறுசுறுப்பு குறையவில்லை, விக்கெட்டுக்கு பின்னால் இருந்து இந்த சாதனையை படைத்தார்.

இதப்பாருங்க> சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆட்டம் கண்ணில் பட்டது

சென்னை அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா மைதானமா இல்லை, சென்னை சேப்பாக்கம் மைதானமா என்கிற அளவில் ஈடன் கார்டன் மைதானமே தோனி என்ற ஒற்றை ஆளுக்காக மஞ்சள் நிறமாக ரசிகர்களின் கூட்டத்தால் காட்சியளித்தது. இந்தநிலையில், தொடர்ந்து 4 அரை சதங்களை குவித்து சென்னை அணியின் பிளே ஆஃப் பாதையை எளிமையாக்கி வரும் கான்வே, போட்டிக்கு பின்னதான பேட்டியில் தோனிக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.

இதப்பாருங்க> IPL போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் யார் வெற்றி பெற்றார்கள்

அதில், “ருதுராஜ் உடன் கூட்டணி அமைத்து துவக்க ஆட்டக்காரராக விளையாடுவது எனது பதற்றத்தை குறைக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் நிறைய பாராட்டுகள் அவருக்குத்தான் சென்று சேர வேண்டும். முடிந்தவரை நான் தெளிவாக இருக்க முயற்சிக்கிறேன். எனது உடலுக்கு வரும் பந்தை எதிர்கொள்வதில் எனக்கு எப்போதுமே பிரச்சனை இருந்தது. ஆனால் அதை தற்போது சமாளித்து வருகிறேன். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எனது கால்களை பயன்படுத்துவதன் மூலம், நான் சிறப்பாக விளையாடி வருகிறேன்.

இதப்பாருங்க> ஈடனில் ரஹானே, துபே சிக்ஸர் மழை.. கொல்கத்தா இலக்கு 236

சென்னை அணியில் உள்ள கலாசாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதனால்தான் தொடர்ந்து வெற்றிகளை பெற முடிகிறது. எம்.எஸ். தோனி அணியில் இருப்பதால், நாட்டில் எங்கு சென்று விளையாடினாலும், ஒவ்வொரு போட்டியும் சொந்த மைதானத்தில் விளையாடுவது போன்ற உணர்வை எங்களுக்கு தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதப்பாருங்க> IPL 2023 வெற்றியாளர் யார் என்று மைக்கேல் வாகன் கூறியதால் ஆர்சிபி, மும்பை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என்று கூறப்படுவதால், சென்னை அணி பங்குகொள்ளும் போட்டி மைதானங்களில் எல்லாம் மஞ்சள் நிறமாகக் காணப்படுவது வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்து வருவதாக தெரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button