தோனி ரசிகர்களுக்கு செம்ம விருந்து…12ம் தேதி வெளியாகும் தோனி படம்…!

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி ஆடி வருகிறார்.
சென்னை,

இதப்பாருங்க> ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை..? மீண்டெழுமா லக்னோ? நேருக்கு நேர்! சொல்வது என்ன?

ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதப்பாருங்க> லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது, இரு அணிகளின் 11-வது ஆட்டத்தை அறியவும்.

இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி சென்னை அணி விளையாடும் மற்ற மைதானங்களில் கூட சென்னை அணியின் ரசிகர்கள் சூழ்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனியின் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதப்பாருங்க> “தோனி.. தோனி..” வந்து விழுந்த கேள்வி.. மஞ்சள் டீ சர்டுடன் குலுங்கிய லக்னோ! எல்லாம் நம்ம கரவுண்டுதான்

அந்த அறிவிப்பு என்னவென்றால் எம்.எஸ். தோனி படம் வருகிற 12ஆம் தேதி மீண்டும் ரிலீசாக உள்ளது. 2016ஆம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான M.S. Dhoni: The Untold Story திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதப்பாருங்க> வெவ்வேறு கேப்டன்களின் கீழ் இந்திய டெஸ்ட் அணியின் செயல்திறனை விரிவாக ஒப்பிட்டுப் பார்ப்போம்

இந்த சூழலில், ஐபிஎல்லில் தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வரும் சூழலில், படத்தை வரும் 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என படக்குழு மகிழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *