மகனுக்காக நான் மும்பை பிளேயிங் இல் தலையிடுவது கிடையாது. அவனுக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினான். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். – சச்சின் டாக்

மகனுக்காக நான் மும்பை பிளேயிங் இல் தலையிடுவது கிடையாது. அவனுக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினான். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். – சச்சின் டாக்
இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் அதிக தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற அணியான ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது ஆண்டாக கடந்த 2022 ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஐ.பி.எல்லில் அர்ஜூன் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என சச்சினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சச்சின் பதிலளிக்கையில், ‘இது வித்தியாசமான ஒரு கேள்வி. நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. அர்ஜூனுடன் என்னுடைய உரையாடல் எப்போதும் இப்படித் தான் இருக்கும். உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது. மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய்.
அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என சொல்வேன். ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அணித்தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவது கிடையாது.’ என தெரிவித்தார்.