ஆர்சிபி மட்டும் இன்று தோல்வியடைந்தால்.. எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்.. செய்வார்களா ஐதராபாத்?
ஐதராபாத் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாட உள்ள போட்டி சென்னை மற்றும் லக்னோ அணி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
IPL தொடரின் 65வது லீக் போட்டியில் ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ள நிலையில், பெங்களூரு அணி இனி விளையாடப் போகும் வெற்றிபெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதற்கேற்ப பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஃபார்மில் உள்ளது. இதனால் ஆர்சிபி அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதப்பாருங்க> சூர்யகுமாரின் மட்டையை இந்த லக்னோ பவுலர் கட்டுப்படுத்துவாரா? SKYக்கு எதிராக லெக் ஸ்பின்னர்களின் உருவங்கள் ஆபத்தானவை
அதேபோல் சென்னை அணி 15 புள்ளிகளுடன் இன்னும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யவில்லை. டெல்லி அணிக்கு எதிராக ஆடவுள்ள கடைசி போட்டியில் வெற்றிபெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்குள் கால் பதிக்கலாம் என்றாலும், இன்றையப் போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்தாலே, சென்னை மற்றும் லக்னோ அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதப்பாருங்க> கடைசி ஓவர் ஹார்ட் பிரேக் vs LSG; பிளே ஆஃப் நம்பிக்கை காத்திருக்க வேண்டும்
இரு அணிகளும் தலா 15 புள்ளிகளுடன் உள்ள நிலையில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகளால் மட்டுமே 16 புள்ளிகளை எட்ட முடியும் என்ற நிலையில் உள்ளனர். இரு அணிகளில் ஒரு அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட 15 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை மற்றும் லக்னோ அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். ஆனால் யாருக்கு எந்த இடம் என்பது மட்டும் உறுதி செய்யப்படாமல் இருக்கும்.
இதனால் இன்று ஐதராபாத் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாட உள்ள மீதான எதிர்பார்ப்பு சென்னை மற்றும் லக்னோ அணிகளின் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு IPL தொடரில் ஐதராபாத் அணி தான் சொந்த மண்ணில் மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் பெரும்பாலும் பெங்களூரு அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.