Cricket

வரலாற்றை மாற்றி அமைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது Chennai Super Kings!

பிளே ஆஃப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று (மே 23) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற பிளே ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இதப்பாருங்க> ரிதுராஜ்-கான்வே டெல்லி அணியை 223 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர்

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களையும், டெவான் கான்வே 40 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களையும் எடுத்தனர்.

இதப்பாருங்க> ஹர்திக் பாண்டியா மற்றும் எம்எஸ் தோனி அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 1ல் தோல்வியடைபவருக்கு கடைசி வாய்ப்பு கிடைக்கும்.

குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி, மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. குஜராத் அணி தரப்பில், ஷுப்மன் கில் 42 ரன்களையும், ரஷீத் கான் 30 ரன்களையும் , தசுன் ஷனகா 17 ரன்களையும் எடுத்தனர்.

இதப்பாருங்க> இன்னும் ரெண்டே போட்டிகள் தான்.. முடிகிறது IPL League சுற்று.. பெங்களூரு, மும்பை கரையேறுமா?

சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தீக்ஷனா, ஜடேஜா, பதிரான தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். சேப்பாக்கம் மைதானம் அருகே ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

இதப்பாருங்க> குஜராத்தின் வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததால் ஆர்சிபியின் கனவு மீண்டும் தகர்ந்தது

15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது. நான்கு முறை ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது.

இதப்பாருங்க> சேப்பாக்கமும் – தோனியும்.. பிளே ஆஃப்பில் படைத்த சாதனைகளும் – சோதனைகளும்… ஒரு பார்வை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button