இந்திய அணியுடன் படுமோசமாக தோற்ற பின்னர் புலம்பும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய வேளையில் நேற்றுடன் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 அவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.
பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 100 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக 88 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் கூறுகையில்
நாங்கள் இந்த போட்டியில் நன்றாக விளையாடவில்லை அதை ஒப்புக்கொள்கிறேன். மேலும் நாங்கள் தொடர்ந்து செய்து வரும் தவறுகளில் இருந்து இன்னும் சரியான பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை. பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி நாங்கள் இன்னும் முன்னேற்றத்தை செய்ய வேண்டியது அவசியம். இந்த போட்டியின் போது எங்களால் எந்த இடத்திலும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவே முடியவில்லை.
அந்த அளவிற்கு இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி நாங்கள் நல்ல ஒரு திறனை வெளிக்காட்ட வேண்டும். அதேபோன்று இந்திய அணி போன்ற ஒரு கடினமான அணிக்கு எதிராக நாங்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். இந்திய அணி விளையாடிய முற்றிலும் சிறப்பான ஆட்டத்தினால் எங்களால் எந்த இடத்திலுமே அவர்களை பிடிக்க முடியவில்லை. உலககோப்பை இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள வேளையில் எங்கள் அணியை நாங்கள் வலுவாக கட்டமைக்க வேண்டியது அவசியம்.
இந்திய அணி இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு எனது வாழ்த்துக்கள். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அவர்கள் சிறந்து விளங்கியயதால் இந்த தொடரில் எங்களை வீழ்த்தினர். மேலும் எங்களை விட அவர்கள் சிறந்த அணி என்பதனை இந்த தொடரில் காண்பித்து விட்டனர் என நிக்கோலஸ் பூரான் தனது வருத்தத்தை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.