மே.இந்திய தீவுகளை அடுத்து அயர்லாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம்; வெளியானது அட்டவணை
அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்தப்பயணத்தின் தொடக்கமாக ஜுலை 12 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் விவரம்;
டெஸ்ட் தொடர் : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), இஷன் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி என மொத்தம் 16 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தொடர் : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷன் கிஷான் , ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அயர்லாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப் பயணத்திற்கான தேதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாட இருக்கும் 3 டி20 போட்டிகளும் மலாஹைட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18 ஆம் தேதியும் இரண்டாவது டி20 ஆகஸ்ட் 20 ஆம் தேதியும் மூன்றாவது டி20 ஆகஸ்ட் 23 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.