இலங்கையுடன் நிகழ்த்திய சாதனையை மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் உடன் நிகழ்த்திக் காட்டிய இந்திய அணி

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய வேளையில் நேற்றுடன் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 அவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.

பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 100 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக 88 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. முன்னதாக இந்த சுற்றுப் பயணத்தில் ஏற்கனவே ஒருசில வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த இந்தியா 5வது போட்டியில் பெற்ற வெற்றியையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 வௌ;வேறு அணிகளுக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற புதிய உலக சாதனையும் படைத்துள்ளது.
1. வரலாற்றில் வெஸ்ட் இண்டீசை 25 டி20 போட்டிகளில் எதிர்கொண்ட இந்தியா அதில் உலகிலேயே மற்ற அணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 17 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதேபோல் இலங்கைக்கு எதிராகவும் பங்கேற்ற 25 போட்டிகளில் உலகில் உள்ள மற்ற அணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 17 வெற்றிகளை இந்தியா பதிவு செய்துள்ளது.
2. இந்தியாவைத் தவிர உலகில் வேறு எந்த அணிகளும் 2 வௌ;வேறு எதிரணிகளுக்கு எதிராக 17 வெற்றிகளை பதிவு செய்தது கிடையாது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் 16 வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.