Cricket
உலகக்கோப்பை: இந்திய அணிக்கு திரும்பும் கே.எல்.ராகுல்?
காயம் காரணமாக சிகிச்சையில் இருந்த கே.எல்.ராகுல், குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலகி இருந்த கே.எல்.ராகுல் குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக இருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், அவர் தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளார்.
இதப்பாருங்க> 2023 உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
இதுகுறித்து நேற்று தன் இன்ஸ்டா பக்கத்தில், ‘Starting to feel like me again’ (நான் மீண்டும் நானாக உணரத்தொடங்கிவிட்டென்) என்று பதிவிட்டிருந்தார் கே.எல்.ராகுல்.
இதைத்தொடர்ந்து அவர் உலகக்கோப்பையில் மீண்டும் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.