5 வருட காத்திருப்பு.. சச்சினை சமன் செய்ய இன்னும் ஒன்று போதும்; 76-வது சதமடித்தார் விராட் கோலி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 76-வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தாலும், ரவிசந்திரன் அஸ்வினின் அற்புதமான பந்துவீச்சாளும் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்திய அணி.

இதப்பாருங்க> ”உணர்வுகளை பகிர்ந்துகொள்ள கூட பயமாக இருக்கிறது” – வாய்ப்பு கிடைக்காத மனப்போராட்டம் பற்றி பிரித்வி ஷா

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டை போல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி வலுவான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அடுத்த 13 ரன்னில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, அதற்கு பிறகு கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் மீட்க போராடினர்.

இதப்பாருங்க> ஆசியக்கோப்பை 2023: சிக்ஸர் விளாசி சதம் அடித்த சாய் சுதர்சன்; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஏ அணி!

அதிக பேட்டிங் சராசரியோடு 1000 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஜோடி!
சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். டெஸ்ட் போட்டிகளில் 1000 பார்டனர்ஷிப் ரன்களை கடந்த இந்த ஜோடி, அதிக சராசரியோடு பார்ட்னர்ஷிப் போட்டு 1000 ரன்களை கடந்த இந்திய ஜோடிகள் பட்டியலில் 66.73 சராசரியோடு 3வது இடத்தில் உள்ளனர்.

அந்த பட்டியலில் 77.81 சராசரியுடன் நவ்ஜோத் சிங் சித்து – சச்சின் டெண்டுல்கர் ( 16 போட்டிகளில் 1245 ரன்கள்), 67.82 சராசரியுடன் சச்சின் டெண்டுல்கர் – சேவாக் ( 23 போட்டிகளில் 1560 ரன்கள்) என முதலிரண்டு இடங்களில் இருக்கின்றனர்.

76-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி!
2018ஆம் ஆண்டிற்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் சதமே அடிக்காமல் இருந்த விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதனை பூர்த்தி செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 76 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

இதப்பாருங்க> 500 சர்வதேச போட்டிகள்: சச்சின், தோனியுடன் இணையும் விராட் கோலி

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர், தனது 76-வது சர்வதேச சதத்தை எடுத்துவந்து அசத்தினார். தனது 29-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

வெளிநாட்டு மண்ணில் சச்சினின் சாதனையை நெருங்கும் கோலி!
2018ஆம் ஆண்டிற்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் சதத்தையே பதிவு செய்யாமல் இருந்து வந்தார் விராட் கோலி. இந்நிலையில் 5 வருட காத்திருப்பிறகு இந்த டெஸ்ட் போட்டியில் முற்றுப்புள்ளி வைத்து, தனது 28-வது சதத்தை வெளிநாட்டு மண்ணில் பதிவு செய்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் அதிக வெளிநாட்டு (29) சதங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர். அவரை பின்னுக்கு தள்ளி இன்னும் இரண்டு சதங்களே கோலிக்கு தேவையாக உள்ளது.

இதப்பாருங்க> டெஸ்ட் பேட்டிங் தரவரிசை – டாப் 10 இடங்களுக்குள் நுழைந்தார் ரோஹித் ஷர்மா! T20-ல் சூர்யா முதலிடம்!

தற்போதையை நிலவரப்படி இந்திய அணி 112 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 121 ரன்களுக்கும், விராட் கோலி 61 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *