“இவருடன் மதுபான விடுதியில் பலர் மதுபானத்தை பகிர்ந்திருக்கிறார்கள்” – மனம் திறந்த ஜாம்பவான் சங்கக்கார !

கிரிக்கெட் அரங்கில் மிகவும் புகழ்பெற்ற அம்பயர்ளில் ஒருவரான தென்னாபிரிக்காவை சேர்ந்த ரூடி கோர்ட்சன் கார் விபத்தில் தனது 72ஆவது வயதில் காலமானார். கிரிக்கெட் போட்டிகளில் ஸ்லோ மோஷன் ஸ்டைலில் கைகளை தூக்கி அம்பயரிங் செய்வதன் மூலம் புகழ்பெற்றவர் ரூடி கோர்ட்சன். இவரின் இந்த ஸ்டைல், வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் பரபரப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும். இதன் மூலமே இவர் உலக ரசிகர்களிடையே மிக பிரபலமடைந்தார் ரூடி கோர்ட்சன். இந்நிலையில் இவர் உயிரிழந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

கார் விபத்தில் மறைந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் அம்பயர் ரூடி கோர்ட்சனின் அவரது மறைவிற்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
‘ரூடி கோர்ட்சன் துயரமாக இழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னவொரு அருமையான நண்பர் மற்றும் நடுவர். உண்மையில் அவர் விளையாட்டை நேர்மையாக விரும்பினார். அவருடன் மதுபான விடுதியில் பலர் மதுபானத்தை பகிர்ந்திருக்கிறார்கள். உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் நண்பரே’ என தெரிவித்துள்ளார்.